STD 7 TERM 1 SCIENCE 5. REPRODUCTION AND MODIFICATION IN PLANTS TEST - 2 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 1 SCIENCE 5. REPRODUCTION AND MODIFICATION IN PLANTS TEST - 2
Question 1 of 25 0%
Question 1
What helps in the self-pollination of tomato flowers by creating vibrations?
தக்காளி மலர்களில் மகரந்தத்தூள்கள் வெளியேற அதிர்வுகளை ஏற்படுத்துவது எது?
Question 2
Which of the following acts as the pollinating agent for paddy?
நெல்லின் மலர்களில் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் காரணி எது?
Question 3
Which of the following plants has distinct male and female flowers requiring cross-pollination?
பின்வருவனவற்றுள் தனித்தனி ஆண் மற்றும் பெண் மலர்களைக் கொண்டு அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் தாவரம் எது?
Question 4
What is the process of fusion of male and female gametes called?
ஆண் கேமீட்டும் பெண் கேமீட்டும் இணையும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 5
Where are the ovules located in a flower?
ஒரு மலரில் சூல்கள் எங்கே காணப்படுகின்றன?
Question 6
What does the ovary develop into after fertilization?
கருவுறுதலுக்குப் பின் சூற்பை எதுவாக மாறுகிறது?
Question 7
What do ovules transform into after fertilization?
கருவுறுதலுக்குப் பின் சூற்பையில் உள்ள சூல்கள் எதுவாக மாறுகின்றன?
Question 8
In which of the following plants do the sepals persist with the fruit after fertilization?
பின்வருவனவற்றுள் எந்தத் தாவரத்தில் கருவுறுதலுக்குப் பின் புல்லி இதழ் கனியோடு ஒட்டி நிலைத்திருக்கும்?
Question 9
Which of the following is made up of many fruits aggregated together?
பல கனிகள் சேர்ந்து உருவான திரள் கனி எது?
Question 10
Which part of the mango is sweet and edible?
மாம்பழத்தில் எந்தப் பகுதி இனிப்பாகவும் உண்ணக்கூடியதாகவும் உள்ளது?
Question 11
Which is the world's largest and heaviest seed?
உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை எது?
Question 12
Which plant has the smallest seeds in the plant kingdom?
தாவர உலகின் மிகச் சிறிய விதைகளைக் கொண்ட தாவரம் எது?
Question 13
What is the production of new plants without pollination and fertilization called?
மகரந்தச்சேர்க்கை மற்றும் கருவுறுதல் இன்றி புதிய தாவரங்கள் உருவாகும் முறை எது?
Question 14
From which part does a new shoot arise in a potato?
உருளைக்கிழங்கில் எந்தப் பகுதியிலிருந்து புதிய தாவரம் உருவாகிறது?
Question 15
By which process does Yeast undergo reproduction?
ஈஸ்ட் எந்த முறையில் இனப்பெருக்கம் செய்கிறது?
Question 16
How does Spirogyra, a filamentous alga, reproduce?
இழை வடிவம் உடைய ஸ்பைரோகைரா பாசி எவ்வாறு இனப்பெருக்கம் செய்கிறது?
Question 17
When do plants like algae, fungi, and mosses produce spores?
பாசிகள் மற்றும் பூஞ்சைகள் போன்ற தாவரங்கள் ஸ்போர்களை எப்போது உருவாக்குகின்றன?
Question 18
What is the shape of the modified tap root of a radish?
முள்ளங்கியின் மாறுபட்ட ஆணிவேர் எந்த வடிவில் உள்ளது?
Question 19
Which of the following has a top-shaped modified root?
பம்பர வடிவ வேர் மாற்றுருவைக் கொண்ட தாவரம் எது?
Question 20
What is the shape of the modified root of a carrot?
கேரட் தாவரத்தின் வேர் மாற்றுரு எந்த வடிவம் கொண்டது?
Question 21
Which type of modified roots provide mechanical support in a Banyan tree?
ஆலமரத்தில் ஆதாரமளிப்பதற்காகக் காணப்படும் வேர்கள் எவை?
Question 22
What type of supporting roots are found in sugar cane and maize?
கரும்பு மற்றும் மக்காச் சோளத்தில் காணப்படும் ஆதார வேர்கள் எவை?
Question 23
Which roots help betel and black pepper vines to climb?
வெற்றிலை மற்றும் மிளகுக் கொடிகளில் பற்றி ஏற உதவும் வேர்கள் எவை?
Question 24
Which of the following plants possesses breathing roots or pneumatophores?
சுவாச வேர்களைக் (நியூமேட்டோபோர்கள்) கொண்டுள்ள தாவரம் எது?
Question 25
What type of roots does the parasitic plant Cuscuta have?
கஸ்குட்டா ஒட்டுண்ணித் தாவரம் எவ்வகை வேர்களைக் கொண்டுள்ளது?
Question 26
What kind of plant is Vanda?
வாண்டா என்பது எவ்வகைத் தாவரம்?
Question 27
Which tissue in Vanda absorbs moisture from the atmosphere?
வாண்டா தாவரத்தில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் திசு எது?
Question 28
What are the spines on a cactus modified from?
சப்பாத்திக்கள்ளியில் காணப்படும் முட்கள் எதன் மாற்றுருவாகும்?
Question 29
Which part performs photosynthesis in a cactus plant?
கள்ளித் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை எந்தப் பகுதியின் மூலம் நடைபெறுகிறது?
Question 30
What is the approximate weight of a single double coconut seed?
ஒரு இரட்டைத் தேங்காய் விதையின் எடை சுமார் எவ்வளவு இருக்கும்?
Question 31
What is the approximate weight of 35 million orchid seeds?
35 மில்லியன் ஆர்க்கிட் விதைகளின் எடை தோராயமாக எவ்வளவு?
Question 32
Which of the following parts falls off after fertilization?
கருவுறுதலுக்குப் பின் கீழே உதிரும் பகுதி எது?
Question 33
What does the pollen tube carry during fertilization?
கருவுறுதலின் போது மகரந்தக்குழல் எதை எடுத்துச் செல்கிறது?
Question 34
What are roots growing from a stem or leaf called?
தண்டு அல்லது இலைகளிலிருந்து தோன்றும் வேர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 35
What do the breathing roots of Avicennia have for air circulation?
வாயுப் பரிமாற்றத்திற்காக அவிசினியாவின் சுவாச வேர்களில் என்ன காணப்படுகின்றன?
Question 36
Which of the following is a non-flowering plant that reproduces via spores?
ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் பூவாத் தாவரம் எது?
Question 37
Which fruit forms a non-fleshy covering pouch for many seeds?
சதைப்பற்று அற்று, பல விதைகளை உள்ளடக்கிய மூடிய அறை போன்ற கனி எது?
Question 38
What agent is used for cross-pollination in apples and strawberries?
ஆப்பிள் மற்றும் ஸ்ட்ரா ஃபெர்ரியில் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் காரணி எது?
Question 39
Why do plant parts modify their shape and structure?
தாவரப் பகுதிகள் ஏன் மாற்றுரு அடைகின்றன?
Question 40
The vegetable part we consume as 'carrot' is actually a:
நாம் உண்ணக்கூடிய 'கேரட்' உண்மையில் தாவரத்தின் எந்தப் பகுதி?
Question 41
Choose the correct or incorrect statements:
1. Sepals always fall off after fertilization in all plants.
2. Custard apple is a single simple fruit.
சரியான அல்லது தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
1. எல்லா தாவரங்களிலும் கருவுறுதலுக்குப் பின் புல்லி இதழ் உதிர்ந்து விடும்.
2. சீத்தாப்பழம் ஒரு தனிக்கனியாகும்.
Question 42
Choose the correct or incorrect statements:
1. Ovary enlarges to store food materials and develops into a fruit.
2. Ovules present inside the ovary develop into seeds.
சரியான அல்லது தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
1. சூற்பை பருத்து கனியாக மாறுகிறது.
2. சூற்பையில் உள்ள சூல்கள் விதைகளாக மாறுகின்றன.
Question 43
Choose the correct or incorrect statements:
1. Spore formation occurs primarily during favourable conditions.
2. Yeast reproduces asexually through fragmentation.
சரியான அல்லது தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
1. சாதகமான சூழ்நிலையில் ஸ்போர்கள் உருவாகின்றன.
2. ஈஸ்ட் துண்டாதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
Question 44
Choose the correct or incorrect statements:
1. Orchids have the largest seeds in the plant kingdom.
2. The double coconut has the smallest seeds.
சரியான அல்லது தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
1. தாவர உலகில் ஆர்க்கிட் மிகப்பெரிய விதைகளைக் கொண்டுள்ளது.
2. இரட்டைத் தேங்காய் மிகச் சிறிய விதைகளைக் கொண்டுள்ளது.
Question 45
Choose the correct or incorrect statements:
1. Avicennia tree grows in mangroves or swamps.
2. Cuscuta is a parasitic plant that uses haustorial roots.
சரியான அல்லது தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
1. அவிசினியா மரம் சதுப்பு நிலங்களில் வளர்கிறது.
2. கஸ்குட்டா உறிஞ்சு வேர்களைக் கொண்ட ஒரு ஒட்டுண்ணித் தாவரம்.
Question 46
Which of the following root shape pairs is incorrectly matched?
பின்வரும் வேர் மாற்றுரு வடிவங்களில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Question 47
Which of the following plant and its modified root is incorrectly matched?
தாவரம் மற்றும் அதன் வேர் மாற்றுருக்களில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Question 48
Assertion: In cactus, leaves are modified into spines.
Reason: It is an adaptation to reduce transpiration.
கூற்று: சப்பாத்திக்கள்ளியில் இலைகள் முட்களாக மாறியுள்ளன.
காரணம்: இது நீராவிப்போக்கைத் தவிர்ப்பதற்கான ஒரு தகவமைப்பாகும்.
Question 49
Assertion: Tomato plants need the help of insects despite being self-pollinating.
Reason: Insects create vibrations within the flowers that effectively loosen the pollen.
கூற்று: தக்காளியில் தன் மகரந்தச்சேர்க்கை நடைபெற்றாலும் பூச்சிகள் தேவைப்படுகின்றன.
காரணம்: பூச்சிகள் மலரில் ஏற்படுத்தும் அதிர்வுகளால் மகரந்தத்தூள்கள் வெளியேறுகின்றன.
Question 50
Assertion: Avicennia has roots seen above the ground.
Reason: These roots grow above ground to provide mechanical support to the plant.
கூற்று: அவிசினியாவில் வேர்கள் தரைக்கு மேலே வளர்கின்றன.
காரணம்: தாவரத்திற்கு ஆதாரமளிப்பதற்காக இவ்வேர்கள் தரைக்கு மேல் வளர்கின்றன.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science 5. Reproduction and Modification in Plants Test - 2

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments