EMIS APP ATTENDENCE NOT SYNC NETWORK ERROR BY ICT EDUCATION TOOLS

 ICT EDUCATION TOOLS

1.திருக்குறள் 2.PHONETIC 3.பொது அறிவு 4.பழமொழிகள் 5.விடுகதைகள் 6.ABBREVIATION 7.HOMOPHONES 8.INVENTIONS  

 *ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்*

📍 *TN_ EMIS APP*- ல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்வது கட்டாயமாகும்
என்பதை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் நன்கு அறிவர் .

📍பதிவுகளை Offline- லும் செய்ய இயலும் . Network செழுமையான இடங்களில் பதிவுகள் உடனடியாக server சென்றடைகிறது. அதற்கான Acknowledgement- தான் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட வகுப்புகள் பச்சை நிறத்தில் மாறுவது. அவ்வாறு பச்சை நிறம் வராமல், மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிட்டால் , நம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன, ஆனால் server -ஐ சென்றடையவில்லை என்று அர்த்தமாகும். server- ஐ சென்றடைவதில் உள்ள இடர்பாடுகளில் ஒன்று பள்ளி அமைவிடத்தில் எந்த ஒரு Network வலுவுடன் இல்லாமல் இருப்பது.

📍மேலும் கைபேசியில் உள்ள ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட பழைய கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவை பதிவுகளை உடனடியாக வெளிச்செல்ல முடியாதபடி தடுத்தல். இந்த சிக்கல் கைபேசியின் இயக்க நினைவாற்றலை (RANDOM ACCESS MEMORY) பொறுத்தது.

📍 பதிவுகள் server-ஐ சென்றடைந்தாலும், அறிக்கை பகுதிக்கு (REPORT MODULE ) ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறைதான் பதிவுகள் சென்றடைவதால்', ஒரு மணி நேர இடைவெளியில் server-ஐ சென்றடைந்த பதிவுகள், அடுத்த ஒரு மணி நேரம் வரை அறிக்கையில் இடம்பெறுவதில்லை. இது பள்ளிகளிடையே நிறைவின்மையை ஏற்படுத்துகிறது.

📍01.12.2021 அன்று நடைபெற்ற மதிப்புமிகு ஆணையர் அவர்களின் கூட்டத்திலும் ,இன்று 13.12.2021 நடைபெற்ற மரியாதைக்குரிய மாநில திட்ட இயக்குநர் அவர்களின் ஆய்வு கூட்டத்திலும் *வருகை பதிவை ஒவ்வொரு நாளும் நூறு சதவிகிதம்* உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 *கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் :*

🎯அந்நாளைய பதிவுகள் மறுநாள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

🎯எனவே server-க்கு பதிவுகள் சென்றடைவதில் ஏற்படும் காலதாமத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் மாலைக்குள் SYNC செய்துகொள்ளவேண்டும்.

🎯 *மாலை வரை SYNC செய்ய அனுமதிக்கப்படுவதால் ,பதிவை மாலையில் மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை.*

🎯 காலையில் வகுப்புகள் துவங்கும்போதே பதிவுகளை ONLINE/OFFLINE இல் முடித்துவிடவேண்டும் .

🎯 *எனவே பதிவேற்றம் செய்யும்போதே பதிவு செய்யும் நேரமும்(PUNCHING TIME ) பதிவாகும் என்பது முக்கிமானது.*

🎯தகவல் எந்த நேரத்தில் server-ஐ சென்றடைந்தாலும் PUNCHING TIME மாறாது.

 🎯தொழில்நுட்ப காரணங்களால் தகவல் server-ஐ அடைவதில் ஏற்படும் காலதாமதம் புரிந்துகொள்ளப்படும்.   


🎯ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு பெறப்படும் அறிக்கை மறுநாள் சார்ந்த அலுவலர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

🎯எனவே அனைத்து பள்ளிகளும் NETWORK ISSUE வை காரணம் காட்டாமல் அன்றய சரியான பதிவுகளை கொண்டு 100% ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments