STD 8 SCIENCE LESSON 17 PLANT KINGDOM TEST-2 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: Class 8 Science Lesson 17 Plant Kingdom Test - 2
Question 1 of 25 0%
Question 1
A farmer wants to retain moisture in his nursery plants. Which of the following plants can be applied for this purpose?
ஒரு விவசாயி தனது நாற்றங்காலில் ஈரப்பதத்தை தக்கவைக்க விரும்புகிறார். இதற்குப் பின்வரும் எந்தத் தாவரத்தைப் பயன்படுத்தலாம்?
Question 2
An industry requires a plant extract for preparing paint and relieving joint pains. Which plant's resin is suitable?
ஒரு தொழிற்சாலைக்கு வண்ணப் பூச்சு தயாரிக்கவும் மூட்டு வலியைப் போக்கவும் ஒரு தாவரச் சாறு தேவைப்படுகிறது. எந்தத் தாவரத்தின் பசை இதற்கு ஏற்றது?
Question 3
A patient is suffering from asthma and respiratory problems. Extract from which plant will yield the specific alkaloid to cure this?
ஒரு நோயாளி ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். எந்தத் தாவரத்திலிருந்து பெறப்படும் அல்கலாய்டு இதைக் குணப்படுத்தப் பயன்படும்?
Question 4
A person accidentally got skin burns. The paste of which plant's leaves can be applied to cure the burns?
ஒருவருக்கு எதிர்பாராதவிதமாகத் தோலில் தீக்காயம் ஏற்பட்டது. எந்தத் தாவரத்தின் இலையை அரைத்துப் பெறப்படும் பசை தீக்காயத்திற்கு மருந்தாகும்?
Question 5
Which plant would be prescribed by a traditional practitioner for a patient suffering from jaundice and needing liver strengthening?
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரலை வலுப்படுத்த வேண்டிய நோயாளிக்கு, பாரம்பரிய மருத்துவர் எந்தத் தாவரத்தைப் பரிந்துரைப்பார்?
Question 6
Identify the incorrect statement about Gymnosperms.
ஜிம்னோஸ்பெர்ம்கள் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 7
Find the incorrect statement regarding Monocotyledons.
ஒருவிதையிலைத் தாவரங்கள் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 8
Which of the following statements is incorrect about Bryophytes?
பிரையோஃபைட்டுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 9
Which of the following is incorrect regarding Pteridophytes?
டெரிடோஃபைட்டுகள் குறித்துப் பின்வருவனவற்றில் எது தவறானது?
Question 10
Which is an incorrect characteristic of Dicotyledons?
இருவிதையிலைத் தாவரங்களின் தவறான பண்பு எது?
Question 11
Assertion (A): Pteridophytes are called vascular cryptogams.
Reason (R): They are the first true land plants with xylem and phloem.
கூற்று (A): டெரிடோஃபைட்டுகள் கடத்துத் திசுக்களைக் கொண்ட பூவாத் தாவரங்கள் எனப்படுகின்றன.
காரணம் (R): இவை சைலம் மற்றும் புளோயம் திசுக்களைக் கொண்டுள்ள முதலாவது உண்மையான நிலத் தாவரங்களாகும்.
Question 12
Assertion (A): Angiosperms are known as closed seeded plants.
Reason (R): The ovule is enclosed by the ovary.
கூற்று (A): ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மூடிய விதைத் தாவரங்கள் எனப்படுகின்றன.
காரணம் (R): இவற்றில் சூலானது சூற்பையால் சூழப்பட்டுள்ளது.
Question 13
Assertion (A): Solanum trilobatum is used in the treatment of bronchial asthma.
Reason (R): It belongs to the family Solanaceae.
கூற்று (A): சொலானம் டிரைலொபேட்டம் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
காரணம் (R): இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
Question 14
Assertion (A): Turpentine is extracted from the resin of Pinus.
Reason (R): Pinus is an example of an Angiosperm.
கூற்று (A): பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து டர்பன்டைன் எண்ணெய் பெறப்படுகிறது.
காரணம் (R): பைனஸ் என்பது ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
Question 15
Assertion (A): Ginkgo biloba produces an unpleasant smell.
Reason (R): It is the only living species in the Ginkgoales group.
கூற்று (A): ஜிங்கோ பைலோபா துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.
காரணம் (R): ஜிங்கோயேல்ஸ் தொகுப்பிலுள்ள ஒரே வாழும் தாவரம் இதுவாகும்.
Question 16
Which bryophyte yields 'Peat', a valuable fuel like coal?
நிலக்கரியைப் போன்ற விலை மதிப்புடைய எரிபொருளான 'பீட்' எந்த பிரையோஃபைட் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது?
Question 17
Which of the following is known as 'club moss'?
பின்வருவனவற்றில் எது 'கிளப் மாஸ்' எனப்படுகிறது?
Question 18
Which pteridophyte is commonly known as 'horse tail'?
எந்த டெரிடோஃபைட் தாவரம் 'குதிரை வால்' என்று அழைக்கப்படுகிறது?
Question 19
Which plant yields a vermifuge drug from its rhizome and petioles?
எந்தத் தாவரத்தின் மட்ட நிலத் தண்டு மற்றும் இலைக் காம்புகள் குடற்புழுக் கொல்லியாகப் பயன்படுகின்றன?
Question 20
The sporocarp of which water fern is used as food by some people?
எந்த நீர் பெரணியின் ஸ்போரகக் கனிகளை சிலர் உணவாகப் பயன்படுத்துகின்றனர்?
Question 21
Into how many classes are Pteridophytes classified?
டெரிடோஃபைட்டுகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
Question 22
What is the female sex organ in the prothallus of Pteridophytes called?
டெரிடோஃபைட்டுகளின் புரோதாலஸில் உள்ள பெண் இனப்பெருக்க உறுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 23
Where are the spores produced in Pteridophytes?
டெரிடோஃபைட்டுகளில் ஸ்போர்கள் எங்கு உருவாகின்றன?
Question 24
Which plant has both tap root and coralloid root?
எந்தத் தாவரம் ஆணிவேர் மற்றும் பவளவேர் என இருவகை வேர்களைக் கொண்டுள்ளது?
Question 25
In which group of Gymnosperms do we find needle-like or scale leaves?
எந்த ஜிம்னோஸ்பெர்ம் தொகுப்பில் ஊசி போன்ற அல்லது செதில் போன்ற இலைகள் காணப்படுகின்றன?
Question 26
Which group of Gymnosperms possesses advanced characters similar to Angiosperms?
எந்த ஜிம்னோஸ்பெர்ம் தொகுப்பு ஆஞ்சியோஸ்ஃபெர்ம்கள் போன்ற உயர் பண்புகளைக் கொண்டுள்ளது?
Question 27
Woods of which of the following gymnosperms are used in paper industries?
கீழ்க்கண்ட எந்த ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களின் மரக்கட்டைகள் காகிதத் தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன?
Question 28
Which plant provides soft wood for construction, packing, and the plywood industry?
கட்டுமானத்திற்கும், பொருள்களைப் பொதிவதற்கும் மற்றும் ஒட்டுப் பலகைகள் தயாரிப்பதற்கும் பயன்படும் மென்கட்டைகளைத் தரும் தாவரம் எது?
Question 29
The seeds of which Gymnosperm are edible?
எந்த ஜிம்னோஸ்பெர்ம் தாவரத்தின் விதைகள் உண்பதற்குப் பயன்படக்கூடியவை?
Question 30
Which of the following is an ornamental Gymnosperm?
பின்வருவனவற்றில் எது அழகுக்காக வளர்க்கப்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம்?
Question 31
What does the Greek word 'Angio' mean in the term Angiosperm?
ஆஞ்சியோஸ்பெர்ம் என்ற சொல்லில் உள்ள 'ஆஞ்சியோ' என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் என்ன?
Question 32
Which of the following is NOT a component of xylem in Angiosperms?
கீழ்க்கண்டவற்றில் எது ஆஞ்சியோஸ்பெர்ம்களில் உள்ள சைலத்தின் பகுதி அல்ல?
Question 33
How many types of cells are present in the phloem of Angiosperms?
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஃபுளோயத்தில் எத்தனை வகையான செல்கள் உள்ளன?
Question 34
In Monocotyledons, pollination occurs mostly by:
ஒருவிதையிலைத் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் எதன் மூலம் நடைபெறுகிறது?
Question 35
In Dicotyledons, pollination occurs mostly by:
இருவிதையிலைத் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை பெரும்பாலும் எதன் மூலம் நடைபெறுகிறது?
Question 36
The word 'Taxonomy' is derived from which language?
வகைப்பாட்டியல் (Taxonomy) எனும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Question 37
Who first coined the word 'Taxonomy'?
வகைப்பாட்டியல் எனும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?
Question 38
Which of the following is an example of an Artificial system of classification?
செயற்கை வகைப்பாட்டு முறைக்கு எடுத்துக்காட்டு எது?
Question 39
Bentham and Hooker's classification is an example of:
பெந்தம் மற்றும் ஹுக்கர் வகைப்பாடு எதற்கு எடுத்துக்காட்டு?
Question 40
In which book did Carolus Linnaeus propose his classification system?
கரோலஸ் லின்னேயஸ் தனது வகைப்பாட்டு முறையை எந்தப் புத்தகத்தில் விளக்கியுள்ளார்?
Question 41
What is the name of the book in which Bentham and Hooker published their classification?
பெந்தம் மற்றும் ஹுக்கர் தங்களது வகைப்பாட்டு முறையை விளக்கிய புத்தகத்தின் பெயர் என்ன?
Question 42
Where is the largest Herbarium in India located?
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உலர் தாவரத் தொகுப்பு (Herbarium) எங்கு அமைந்துள்ளது?
Question 43
Who first introduced the Binomial Nomenclature in 1623?
1623 ஆம் ஆண்டு இருசொற் பெயரிடுதல் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Question 44
In Binomial Nomenclature, what does the first word represent?
இருசொற் பெயரிடும் முறையில், முதல் சொல் எதைக் குறிக்கிறது?
Question 45
What does ICN stand for?
ICN என்பதன் விரிவாக்கம் என்ன?
Question 46
Which family does 'Vilvam' (Aegle marmelos) belong to?
'வில்வம்' (ஏகில் மார்மிலோஸ்) எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது?
Question 47
Which part of the Aegle marmelos tree is used to treat indigestion?
செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்ய ஏகில் மார்மிலோஸ் மரத்தின் எப்பகுதி பயன்படுகிறது?
Question 48
To which family does 'Keezhanelli' belong?
'கீழா நெல்லி' எந்தக் குடும்பத்தைச் சார்ந்தது?
Question 49
Which family does Aloe vera belong to?
சோற்றுக் கற்றாழை எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது?
Question 50
Which plant's leaves are used to cure piles and inflammations on the skin?
மூலநோய் மற்றும் தோல் அழற்சியைக் குணப்படுத்த எந்தத் தாவரத்தின் இலைகள் பயன்படுகின்றன?
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Science Lesson 17 Plant Kingdom Test - 2

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments